
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தாயகம் திரும்பினார் . இதனை தொடர்ந்து நடைபெற உள்ள ஆசியக் கோப்பைக்கு அவர் தயாராகி வருகிறார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது.
ஆசிய கோப்பை தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் பெங்களூருவில் ஒரு வாரம் பயிற்சி செய்ய இருக்கிறார்கள்.
இந்த தொடர் முடிந்து உடனடியாக ஆஸ்திரேலிய தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் எதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். தற்போது இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற வீரர்களுக்கு அயர்லாந்து தொடரில் இடம்பெறவில்லை.
Rohit Sharma & his family visited Tirupathi Balaji Temple.pic.twitter.com/2HRFACIzdJ
— Johns. (@CricCrazyJohns) August 13, 2023