
Rohit Sharma is the No.1 cricketer of our country: Chetan Sharma (Image Source: Google)
இலங்கை தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது. டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதன்பிறகு, காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா, "ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை அவர்தான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர். அவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறார்.
ரோஹித்தை எப்படிக் கையாள்கிறோம் என்பது முக்கியம். ரோஹித்திடம் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டை வழிநடத்துவதற்கு ரோஹித் எங்களது தெளிவான தேர்வு. அவரை கேப்டனாக அறிவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே.