ஐபிஎல் 2022: ரோஹித் சர்மா புதிய சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக பவுண்டரி அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் ஷிகர் தவான், 2ஆவது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 52 ரன், தவான் 70 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஆடிய மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். முன்னதாக விராட் கோலி 10,379 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
இதேபோல், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 500 பவுண்டரிகள் அடித்து அசத்தியுள்ளார் . 500 பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரராகியுள்ளார் ரோகித் சர்மா.
Win Big, Make Your Cricket Tales Now