
Rohit Sharma needs to be wary of incoming delivery of Trent Boult: VVS Laxman (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் வெள்ளிக்கிழமை இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, போட்டியின் தொடக்கத்திலேயே இன்ஸ்விங் பந்துவீச்சில் தடுமாறி வருகிறார். அதிலும் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் அவர் பலமுறை விக்கெட்டுகளையும் இழந்துள்ளார்.
இதையடுத்து ட்ரெண்ட் போல்ட்டிற்கு எதிராக ரோஹித் எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார்.