
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கடுத்து அதிரடியான மாற்றங்களில் இறங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் போன்ற மூத்த பேட்ஸ்மேன்களை இந்திய டி20 கிரிக்கெட் வெளியில் வைத்து, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கி, இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தது.
இதற்கு அடுத்து தொடர்ச்சியாக கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், சமீபம் வரை திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் என இளம் வீரர்கள் தொடர்ச்சியாக அணிக்குள் உள்வாங்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இதற்கு முன்பே விராட் கோலியின் இடத்திற்கு ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு தரப்பட்டது. அவரதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் சூர்யகுமார் யாதவ் மேலே சென்று, நான்காவது இடத்திற்கு வந்த திலக் வர்மா கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் கேப்டன் ரோஹித் சர்மாவின் துவக்க இடத்தை இஷான் கிஷானுக்கு கொடுத்து வந்தார்கள். தற்சமயம் அந்த இடத்தை அவரிடம் இருந்து வாங்கி ஜெய்ஸ்வாலுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர் ஒரே ஆட்டத்தில் மட்டும் விளையாடி இருக்கின்ற காரணத்தினால், அந்த இடத்தின் உறுதி பற்றி கூற முடியவில்லை. இதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கான இடம் இந்திய டி20 கிரிக்கெட்டில் இனி கிடையாது என்பதாக பேச்சு இருக்கிறது.