Advertisement

சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு காரணம் - ரோஹித் சர்மா

எங்களது பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சே காரணம் அவர்களின் சிறப்பான பங்களிப்பினால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம் என்று மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement
Rohit Sharma Says Never Lost Faith In 'Solid Guy' Ishan Kishan's Abilities
Rohit Sharma Says Never Lost Faith In 'Solid Guy' Ishan Kishan's Abilities (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 06, 2021 • 11:39 AM

ஐபிஎல் தொடரின் 51 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 06, 2021 • 11:39 AM

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மும்பை அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 90 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் எளிய இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது அதிரடியாக விளையாடி முன்கூட்டியே போட்டியை முடிந்தால் ரன்ரேட் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் துவக்கம் முதலே அதிரடி காண்பித்தது. அதன்படி 8.2 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Trending

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா, “இந்த போட்டியில் நாங்கள் என்ன செய்ய நினைத்தோமோ அதை சரியாக செய்து உள்ளோம். இந்த நேரத்தில் எங்களுக்கு கிடைத்துள்ள இந்த இரண்டு புள்ளிகள் மிகவும் முக்கியமானவை. ஒரு கட்டத்தில் நாங்கள் 90 ரன்களில் அவர்களை ஆல் அவுட் செய்த பிறகு இந்த போட்டியை சீக்கிரமாக முடிக்க நினைத்தோம். 

அதன்படி இந்த போட்டியில் நாங்கள் மிக இயல்பாக எங்களது பேட்டிங்கை வெளிப்படுத்தினோம். இஷான் கிஷன் இரண்டு போட்டிகளுக்கு பின்னர் வந்து தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவருடைய திறமை என்ன என்பது எங்களுக்குத் தெரியும். சிறிது நேரம் மைதானத்தில் நின்றால் நிச்சயம் அவர் இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர் தான்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்த போட்டியில் நாங்கள் பந்து வீச ஆரம்பித்ததும் பந்துவீச்சாளர்கள் சரியான லைன் அன்ட் லென்ந்தில் பந்து வீசினார்கள். ராஜஸ்தான் அணியில் ஏகப்பட்ட அதிரடி வீரர்கள் இருந்தும் அவர்களை கட்டுக்குள் வைத்து சிறப்பாக பந்துவீசினார்கள். மொத்தத்தில் ராஜஸ்தான் அணியை இவ்வளவு எளிய இலக்கில் சுருட்ட எங்களது பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சே காரணம் அவர்களின் சிறப்பான பங்களிப்பினால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement