
Rohit Sharma Suffers Injury During Practice Session Ahead of South Africa Tour: Report (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய சோதனை மற்றும் லேசான பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி மட்டும் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங் செய்யும் போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து வலியால் துடித்த அவர் பயிற்சியை பாதியில் விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என்றும் வேண்டுமானால் ஒரு வாரம் ஓய்வில் இருக்கலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது