
Rohit Sharma To Become 9th Indian Player To Play In More Than 400 International Matches (Image Source: Google)
இந்தியா-இலங்கை அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பெங்களூருவில் இன்று தொடங்கியது.
மேலும் இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா சர்வதேச அளவில் 400 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் 400 போட்டிகளுக்கு மேல் விளையாடிய இந்திய அணி வீரர்கள் விவரம்:
- 664 - சச்சின் தெண்டுல்கர்
- 538 - எம்எஸ் டோனி
- 509 - ராகுல் டிராவிட்
- 458 - விராட் கோலி
- 433 - அசாருதீன்
- 424 - கங்குலி
- 403 - அனில் கும்ப்ளே
- 402 - யுவராஜ் சிங்
- 400 - ரோகித் சர்மா