Advertisement

ரோஹித் சர்மாவுக்கு எச்சரிக்கை விடுத்த பிராட் ஹாக்!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Rohit Sharma Will be Tested in Pressure Tournaments: Brad Hogg
Rohit Sharma Will be Tested in Pressure Tournaments: Brad Hogg (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 18, 2022 • 07:38 PM

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில், ரோஹித் சர்மா இந்திய அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 18, 2022 • 07:38 PM

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டியில் தொடர் வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தொடர் வெற்றி மற்றும் இலங்கைக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டி என தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார். ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக இருக்கிறார் என அனைவரும் பாராட்டும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் மட்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மாவின் முழு திறன் இந்த தொடர்களை வைத்து எல்லாம் எடைப்போட முடியாது. ரோகித் சர்மாவுக்கு சவாலான தொடர்கள் எல்லாம் பின்னாளில் வருகிறது. இன்னும் ரோஹித் சர்மாவுக்கு அழுத்தங்கள் ஏற்பட வேண்டும். அப்போது தான் அந்த தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார். அழுத்தத்தை எப்படி கையாள்கிறார் என்பது குறித்து அறிய முடியும்.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் உள்ளது, ஐபிஎல் முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டி மற்றும் ஆஸ்திரலியாவில் நடைபெறும் டி20 உலககோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் செயல் திறனை காண ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement