ரோஹித் சர்மாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது?
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் ட்விட்டர் பக்கத்தில் தவறான பதிவுகள் போடப்பட்டு வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது.
டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, தற்போது அதற்காக மொஹாலியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் திடீரென இன்று மதியம் ரோஹித் சர்மாவின் ட்விட்டர் பக்கத்தில் தவறான பதிவுகள் போடப்பட்டது. கிரிக்கெட் பந்துகள் உண்பதற்கு தகுந்த ஒன்று தான். மேலும் உருவகேலி செய்வது போன்ற மோசமான பதிவுகளும் ரோகித்தின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியாகின. இதனால் ரசிகர்கள் என்ன ஆனது என்பது புரியாமல் அதிர்ச்சியடைந்தனர்.
Trending
இறுதியில் ரோஹித்தின் ட்விட்டர் கனக்கை யாரோ ஒரு நபரால் ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரின் கணக்கை மீட்க சைபர் துறையில் இருந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இதனால் 3 ட்வீட்களோடு அந்த நபர் தனது ஹேக்கிங்கை நிறுத்திக்கொண்டுள்ளார். ஆனால் ரோஹித்தின் கணக்கு முற்றிலும் மீட்கப்பட்டுவிட்டதா என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் ரோஹித் குறித்த ஹேஷ் டேக்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் க்ருணால் பாண்டியாவின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now