WI vs IND, 1st T20I: ரோஹித், தினேஷ் கார்த்திக் அபாரம்; விண்டீஸுக்கு 191 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஏற்கெனவே இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது. இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
Trending
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் இணை களமிறங்கியது. அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடி 44 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்தும் 14 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 64 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்களைச் சேர்த்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now