எல்எஸ்ஜி இடமிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட்டை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்டை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் பரிமாற்றம் செய்துள்ளது.
இந்தியாவில் நடத்தப்படும் டி20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) தொடருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19ஆம் தேதியில் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக பிசிசிஐ அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தங்களுக்குள் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Trending
இதையடுத்து இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட்டை மும்பை இந்தியன்ஸ் ரூ.50 லட்சத்துக்கு பரிமாற்றம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை மும்பை இந்திய அணி தங்களது எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல் மற்ற அணிகளும் ஏலத்திற்கு முன்னதாக வீரர்களை பரிமாற்றம் செய்துகொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now