
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் 2ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் மேத்யூ ஃபிஷர், சகிப் முகமது ஆகியோர் அறிமுகமானார்கள்.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ரன் எதுவும் எடுக்காமல், 30 ரன்களில் அலெக்ஸ் லீஸும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் டான் லாரன்ஸும் கவனமுடன் விளையாடி பெரிய கூட்டணி அமைத்தார்கள்.
விரைவாக ரன் எடுத்த லாரன்ஸ் 62 பந்துகளில் அரை சதமெடுத்தார். இன்னொரு பக்கம், ரூட் நிதானமாக விளையாடினார். 199 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ரூட். இது அவருடைய 25ஆவது டெஸ்ட் சதம். 2021 முதல் விளையாடிய 19 டெஸ்டுகளில் 8 சதங்கள் அடித்துள்ளார்.