தற்போது நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம் - ரோவ்மன் பாவெல்!
கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக நாங்கள் டி20 தொடரை கைப்பற்றியது கிடையாது. எனவே இம்முறை அதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதாக நினைக்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியாவை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.
Trending
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 8.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பாவெல், “தற்போது நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம். கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக நாங்கள் டி20 தொடரை கைப்பற்றியது கிடையாது. எனவே இம்முறை அதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதாக நினைக்கிறேன்.
இந்த போட்டியில் நான் பவுலர்களை பவர் பிளேவின் போது ஒவ்வொரு ஓவர் மட்டுமே வீச சொன்னேன். ஏனெனில் மைதானம் மிகவும் சூடாக இருந்தது. அதுமட்டுமின்றி ஒரே பவுலரே இரண்டு ஓவர் வீசினால் இந்திய பேட்ஸ்மேன்கள் செட் ஆகி விடுவார்கள் என்பதனால் அனைத்து பவுலர்களுக்குமே ஒரு ஓவரை மட்டுமே வழங்கினேன்.
அதோடு இந்திய அணி பந்துவீசும் போது அவர்களிடம் சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் என மூன்று ஸ்பின்னர்கள் இருந்தால் இடது கை வீரர்கள் வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அந்த வகையில் இந்த போட்டியில் பூரான் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் இருந்தது எங்களுக்கு கவுண்டர் அட்டாக் கொடுக்க உதவியாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now