
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
மேற்கொண்டு இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயம் காரணமாக வநிந்து ஹசரங்கா மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் விளையாடாத நிலையில் ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா ஆகியோருக்கு லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா கயம் காரணமாக விலகிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின் போது சந்தீப் சர்மா காயத்தை சந்தித்தார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரின் காயம் குணமடைய சில காலம் தேவை என்று மருத்துவ குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.