ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜ்ஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் வலிமை வாய்ந்த ராஜஸ்தான் அணியை எதிர்த்து முதல் வெற்றிக்காக போராடி வரும் டெல்லி அணி விளையாட உள்ளது. பஞ்சாப் அணியுடன் அடைந்த தோல்வியால் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தானும், அடுத்தடுத்து இரு தோல்விகளை அடைந்ததால் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணியும் இருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம் - பார்சபரா மைதானம், கௌஹாத்தி
- நேரம் - மாலை 3.30 மாணி
போட்டி முன்னோட்டம்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின், இம்முறை ராஜஸ்தான் அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை பெற்ற ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இருப்பினும் வெற்றிக்கான போராட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு சிறந்த போட்டி கொடுத்து உற்சாகப்படுத்தியது.
தற்போது மீண்டும் அதே மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், ராஜஸ்தான் அணி வெற்றிக்காக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் டெல்லி அணியை பொறுத்தவரையில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளிடம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியின் மோசமான பேட்டிங் மட்டுமே தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்த நிலையில் கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் ஃபார்மிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிரித்வி ஷா இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அவருக்கான வாய்ப்பு பறிபோகும் நிலைக்கு போகும்.
ராஜஸ்தான் அணி தரப்பில் பட்லர் இன்றைய போட்டியில் காயம் காரணமாக களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் டெல்லி அணியின் மிட்செல் மார்ஷ் திருமணத்திற்கு சொந்த ஊர் புறப்படுகிறார். இதனால் அவர்களின் இடங்களை எந்த வீரர் நிரப்ப போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் டெல்லி அணி இன்றையப் போட்டியில் தோல்வியடைந்தால், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை பெற்ற முதல் அணி என்ற மோசமான சாதனையை படைக்கும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 26
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 13
- டெல்லி கேப்பிட்டல்ஸ் - 13
உத்தேச லெவன்
ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோ ரூட், சஞ்சு சாம்சன் (கே), தேவ்தத் பாடிக்கல், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல்
டெல்லி கேப்பிடல்ஸ் - பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (கே), ரிலீ ரூஸோவ், சர்ஃபராஸ் கான், ரோவ்மேன் பவல், அக்சர் படேல், அபிஷேக் போரல், அமன் ஹக்கிம் கான், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார்.
உத்தேச லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன்
- பேட்டர்ஸ் – டேவிட் வார்னர், ஷிம்ரான் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோ ரூட், ரோவ்மேன் பவல்
- ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், அக்சர் படேல்
- பந்துவீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட், அன்ரிச் நோர்ட்ஜே, யுஸ்வேந்திர சாஹல்.
கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - சஞ்சு சாம்சன், டேவிட் வார்னர்
Win Big, Make Your Cricket Tales Now