
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியானது இன்று நடைபெறுகிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், முதலிரண்டு இடங்களை பிடிப்பதற்கான போட்டியாக இது அமையவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்கவுள்ள இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், அந்த அணி இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. எனினும் அந்த அணி கடைசியாக விளையாடி 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த நிலையில் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்ற கையோடு பிளே ஆஃப் சுற்றை எதிர்கொள்ளும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.