
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனில் பலமிக்க அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக எதிரணி பந்துவீச்சாளர்களை சோதிக்கும் திறமை ராஜஸ்தான் அணி பேட்டர்களுக்கு உள்ளதால் நிச்சயம் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவாரே அணியின் பந்துவீச்சிலும் திறமையான வீரர்கள் இடம்பிடித்துள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.