ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறிய நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்திருக்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று அதனை உறுதிசெய்யும் செய்ய முயற்சிக்கும் என்பாதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் 3 வெற்றி 9 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் அந்த அணி இழந்துள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளிலும் வெற்றிபெற்று ரசிகர்களை ஆறுதல் படுத்தும் நோக்கி அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
மேற்கொண்டு காயம் காரணமாக கடந்த சில போட்டிகளை தவறவிட்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் மீண்டும் களமிறங்கவுள்ளார். அதேசமயம் அதிரடி வீரர் லுஹான் ட்ரே பிரிட்டோரியஸும் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளது அணியின் பேட்டிங்கை மேலும் வலிமைப்படுத்திவுள்ளது. இருப்பினும் அணியின் பந்துவீச்சு துறை பின்னடைவை சந்தித்துள்ளதல், இப்போட்டியை அந்த அணி எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, யுத்விர் சிங், ஆகாஷ் மத்வால், துஷார் தேஷ்பாண்டே.
பஞ்சாப் கிங்ஸ்
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் அந்த அணி லக்னோ அணிக்கு எதிராக வெற்றிபெற்ற கையோடு இந்த போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் அந்த அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழப்பது அணிக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து தன் பார்க்கவேண்டும்.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், வைசாக் விஜய் குமார், சேவியர் பார்ட்லெட்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 29
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 17
- பஞ்சாப் கிங்ஸ் - 12
Also Read: LIVE Cricket Score
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - பிரப்சிம்ரன் சிங், சஞ்சு சாம்சன் (கேப்டன்)
- பேட்ஸ்மேன்கள் - ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக்கேப்டன்), ஷஷாங்க் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரியன்ஸ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி
- ஆல்-ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்க, ரியான் பராக், மார்கோ ஜான்சன்
- பந்து வீச்சாளர்கள்- யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
Win Big, Make Your Cricket Tales Now