Advertisement
Advertisement

ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 22, 2024 • 14:17 PM
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இதையடுத்து இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Trending


ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தொடரின் ஆரம்பத்தில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இரண்டாம் கட்ட லீக் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழை காரணமாக ரத்தானதன் காரணத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோரை மட்டுமே பெரிதும் சார்ந்திருப்பது அணிக்கு பெரும் பலவீனமாகி உள்ளது. அதனால் அவர்களுடன் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்ஆல் சிறப்பாக செயல்படுவது அவசியமாகும். அதேசமயம் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஜோஸ் பட்லருக்கு பதிலாக களமிறங்கும் டாம் கொஹ்லர் காட்மோரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

அவர்களுடன் ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜுரெல் போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் அந்த அணியால் வெற்றியை ஈட்டமுடியும். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், நந்த்ரே பர்கர் ஆகியோருடன் ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி மீண்டும் தங்கள் வெற்றி பாதைக்கும் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: டாம் கோஹ்லர் காட்மோர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லீக் சுற்றின் முதல் 8 ஆட்டங்களில் 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும், அதன்பின் நடைபெற்ற 6 போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான வாழ்வா சாவா ஆட்டத்திலும் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆர்சிபி அணியின் பேட்டிங்கில் விராட் கோலி ரன் மெஷினாக செயல்பட்டு வருகிறார். அவருடன் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் ஃபார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. அவர்களுடன் மிடில் ஆர்டரில் ராஜத் பட்டிதார், கேமரூன் க்ரீன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும், ஃபினிஷிங்கில்  தினேஷ் கார்த்திக், மஹிபால் லாம்ரோர் உள்ளிட்ட வீரர்களும் சிறப்பான ஃபார்மில் செயல்பட்டு வருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் யாஷ் தயாள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு துணையாக முகமது சிராஜ், லோக்கி ஃபர்குசன், கேமரூன் க்ரீன் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் அணிக்கு கைகொடுத்து வருகின்றனர். அதேசமயம் கரண் சர்மா, ஸ்வப்நில் சிங் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதால் நிச்சயம் அந்த அணி கூடுதல் உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ராஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, லோக்கி ஃபெர்குசன், யாஷ் தயால், முகமது சிராஜ்
 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement