ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Trending
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த போட்டியில் தோல்வியடைந்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளது. இதில் அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், நிதீஷ் ரானா, ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோரடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்பட்டாலும், இதில் பெரும்பாலான வீரர்கள் ஃபார்மில் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடன் மஹீஷ் தீக்ஷ்னா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்டோரும் இருக்கும் நிலையில் வநிந்து ஹசரங்கா இப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியில் அவருக்கு பதிலாக இடம்பிடித்திருந்த ஃபசல்ஹக் ஃபரூக்கி ரன்களை வாரி கட்டுப்படுத்த தவறியதன் காரண்மாக இன்றைய போட்டியில் ஹசரங்கா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்க, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா. இம்பாக்ட் பிளேயர் - குமார் கார்த்திகேயா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த நிலையில், கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதனால் அந்த அணி இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், படிதர், லிவிங்ஸ்டோன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருடன் குர்னால் பாண்டியா, யாஷ் தயாளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடன் சுயாஷ் சர்மாவும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த அணி கடந்த போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டெழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன் : பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, டிம் டேவிட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் – 32
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 15
- ராஜஸ்தான் ராயல்ஸ் – 14
- முடிவில்லை - 03
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன் (துணை கேப்டன்), பில் சால்ட், ஜிதேஷ் சர்மா
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மையர், ரஜத் படிதார், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், ரியான் பராக்
- பந்து வீச்சாளர்கள்- ஜோஷ் ஹேசில்வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
Win Big, Make Your Cricket Tales Now