
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹார். தற்போது 31 வயதாகும் சஹால், இந்திய அணிக்காக 2016 முதல் 59 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2014 முதல் ஆர்சிபி அணியில் விளையாடியுள்ளார். ஆர்சிபி அணிக்காக 113 ஆட்டங்களில் விளையாடி 138 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு சஹால் அளித்த பேட்டியில், “ஐபிஎல் ஏலத்தில் எனக்கு ரூ. 15 கோடி கிடைக்க வேண்டும் எனக் கூறமாட்டேன். ரூ. 8 கோடியே எனக்குப் போதுமானது.
விராட் கோலி எனக்கு மூத்தவர். ஆர்சிபியில் நான் இருந்த 8 வருடங்களும் எங்களிடையே அருமையான சகோதரப் பாசம் நிலவியது. மைதானத்தில் மட்டுமல்ல அதன் வெளியேயும் அவரிடம் என்னால் என்ன வேண்டுமானாலும் கேட்க முடியும். அந்த நட்பினால் அவருடைய தலைமையின் கீழ் என்னால் சிறப்பாகப் பந்து வீச முடிந்தது.