
Ruturaj Gaikwad has been ruled out of the T20I series against Sri Lanka! (Image Source: Google)
இந்தியா - இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று முதல் போட்டி நடைபெற்று முடிந்த நிலையில், இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் ஓய்வுக்கு சென்றதால், ருதுராஜுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் காரணமாக முதல் டி20 போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதுகுறித்துப் பேசிய இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, “ருதுராஜுக்கு இன்று வாய்ப்பு கொடுக்கலாம் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால், அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால், இன்றைய போட்டியில் களமிறங்க மாட்டார்” எனத் தெரிவித்தார்.