தோனியிடம் அதைப்பற்றி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை - ருதுராஜ் கெய்க்வாட் கூறிய சுவாரஸ்ய தகவல்!
ஓய்வு அறிவிப்பு குறித்து தோனியிடம் கேட்பதற்கு எந்தவொரு வீரருக்கும் தைரியம் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பினிஷருமானவர் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது மேலும் அதிர்ச்சி யூட்டினார். அதன்பின் தற்போது தோனி மற்றும் ரெய்னா இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர்.
Trending
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து அவரிடம் கேட்பதற்கு எந்த வீரருக்கும் தைரியம் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கெய்க்வாட் "தோனி ஓய்வு அறிவித்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாங்கள் சென்னையில் மொத்தம் 10 வீரர்கள் தான் இருந்திருப்போம். எனக்கு அப்போது தோனியின் முடிவு குறித்து எதுவும் தெரியாது. அவரிடம் கேட்கவும் நான் உள்பட எந்த வீரருக்கும் தைரியம் இல்லை. காரணம், நான் அப்போது புதுமுக வீரர். இரவு 7 மணி இருக்கும்போது நாங்கள் உணவருந்தச் சென்றோம். அப்போதுதான் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து இன்ஸ்டாகிராம் மூலம் தெரிந்துகொண்டேன்.
என்னுடன் இருந்த யாருக்கும் இது பற்றி தெரியாது. யாரும் இது குறித்து அப்போது பேசவில்லை. அவர் இனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்பதை அப்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை உணர 2 நாட்கள் தேவைப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now