
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
இந்த தொடரில் கேஎல்ராகுல் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் தேர்வாகியுள்ளனர். இந்த தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் அணிக்கு திரும்பியுள்ளார். ஷிகர் தவானை கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் சேர்க்காமல் தேர்வுக்குழுவினர் இருந்தனர். டி20 உலகக் கோப்பையில் கூட தவான் இந்திய அணியில் தேர்வாகவில்லை
இந்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் , அனுபவ வீரரின் பங்கு தேவை என்பதால் தவான் அணிக்கு திரும்பியுள்ளார். தவான் கடைசியாக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். அதன் பிறகு விவாகரத்து, அணியிலிருந்து நீக்கம் என பல்வேற சரிவுகளை கண்ட தவான், தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்