
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 67ஆஅவது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து, சென்னை அணி சார்பாக கெய்க்வாட் - கான்வே கூட்டணி களமிறங்கியது. 2வது ஓவரிலேயே அதிரடியாக ருதுராஜ் ஒரு பவுண்டரியையும், கான்வே ஒரு சிக்சரையும் விளாச, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு ஓவருக்கும் 2 பவுண்டரிகளை கண்டிப்புடன் சென்னை அணியின் இரு பேட்ஸ்மேன்கள் விளாச தொடங்கினர்.
நோர்ட்ஜே, அக்சர் படேல் என்று நட்சத்திர பந்துவீச்சாளர்கள் கூட இருவரின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 52 ரன்கள் குவித்தது. இதையடுத்து டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் இருவரும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர்.