
ஜிம்பாப்வே அணியுடன் ஒருநாள் தொடரில் மோதுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி நேற்று ஹராரே புறப்பட்டுச் சென்றது. இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெறுகிறது. வரும் 18ஆம் தேதி முதல் ஒருநாள், 20, 22 -இல் இரண்டு மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்திய அணிக்கு முதலில் தொடக்க வீரர் ஷிகா் தவன் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தாா். இதற்கிடையே இளம் வீரா் கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்ட நிலையில், கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த மே மாதம் ஐபிஎல் தொடரில் காயமடைந்திருந்த ராகுல் அதன்பின் போட்டிகள் எதிலும் ராகுல் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த ஜூன் மாதம் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தாா். அப்போதும் காயம் காரணமாக அவா் ஆடவில்லை. இதற்கிடையே தற்போது முழுமையாக ராகுல் குணமடைந்து விட்டதால், மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.