
முன்னாள் கிரிக்கெட் வீரர்களை வைத்து ஐபிஎல் தொடர் போன்ற டி20 தொடர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் கம்பீர் தலைமை தாங்கும் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரீசாந்த் இடம் பெற்று இருக்கும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த கம்பீர் அணி அவருடைய சிறப்பான அதிரடி அரை சதத்தின் காரணமாக ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. இதற்கடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கெயில் அதிரடியாக 81 ரன்கள் எடுத்தாலும், இறுதியாக அந்த அணியால் 211 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் எடுக்க முடிந்தது. எனவே கம்பீரின் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது களத்தில் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இருவரும் மோதிக்கொண்டார்கள். அப்போது கம்பீர் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த், “கம்பீருடன் என்ன நடந்தது என்பது குறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த காரணமும் இல்லாமல் ஷேவாக் பாய் உட்பட எந்த மூத்த வீரர்களையும் அவர் மதிக்கவில்லை. இன்றும் அதுதான் நடந்தது. அவர் என்னை மிகவும் முரட்டுத்தனமாக பேசினார். இப்படி திரு கம்பீர் அவர்கள் செய்யக்கூடாது.