
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் நான்கு வெற்றி இரண்டு தோல்விகள் என்று வலிமையாக ஆரம்பித்த ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது பாதியில் அப்படியே சரிந்து மொத்தமாக விழுந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த பெரிய சரிவுக்கு பேட்டிங் யூனிட் சரிவர செயல்பட முடியாமல் போனது காரணமாக அமைந்தது. குறிப்பாக கேப்டன் சஞ்சு சாம்சனின் பேட்டிங் மோசமாக அமைந்தது. அவர் 55 மற்றும் 42 ரன்கள் எடுத்து அடுத்த இரண்டு ஆட்டத்தில் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார். 14 போட்டிகளில் 362 ரன்கள் எடுத்து இந்த ஐபிஎல் தொடரை முடித்து இருக்கிறார்.
இவரின் இந்த நிலையற்ற பேட்டிங் தொடர்பாக அவருடைய மாநில முன்னாள் வீரர் ஸ்ரீஷாந்த் கூறும் பொழுது, “14 வயது உட்பட்டவர்களுக்கான கேப்டன்சியின் கீழ் அவர் என்னிடம் விளையாடியதால் அவரை நான் ஆதரிக்கிறேன். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் அவரை ஒரு கிரிக்கெட் வீரராக நான் பார்க்கும் பொழுது, அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது மட்டும் இல்லாமல், மாநில அணிக்காக முதல் தர போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.