
SA pacers continue to dictate terms despite Rahul fifty (Image Source: Google)
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. முதுகு வலி காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை. கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்க ஜோடியாக களமிறங்கிய கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி நிதானமாக ஆடியது.
இதையடுத்து மயங்க் அகர்வால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட, அடுத்தடுத்து வந்த புஜாரா 3, ரஹானே 0, விஹாரி 20, ராகுல் 50, பண்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.