
SA T20 League: A fighting finish to the innings with some BIG hitting! (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் இரண்டாம் பாதிக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் இன்று நடைபெற்று வரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய எம்ஐ அணிக்கு டெவால்ட் பிரீவிஸ் - கிராண்ட் ரோலோஃப்சென் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 10 ரன்களில் ரோலோஃப்சென் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 13 ரன்களில் பிரீவிஸும், 5 ரன்களில் ஜார்ஜ் லிண்டேவும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.