SA20 League: சொதப்பிய டாப் ஆர்டர்; டொனாவன் ஃபெரீரா காட்டடியால் தப்பிய சூப்பர் கிங்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் தொடரைப் போன்றே தென் ஆப்பிரிக்காவில் எஸ் ஏ20 எனப்படும் டி20 லீக் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, குயின்டன் டி காக் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தில் வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி சூப்பர் கிங்ஸிற்கு ஜென்மன் மாலன் - ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஹென்றிக்ஸ் ஒரு ரன்னிலும், மாலன் 5 ரன்களிலும் அடுத்து வந்த வெர்ரெய்ன் 10 ரன்களிலும், லூயிஸ் கிரிகோரி 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - டொனாவன் ஃபெரீரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். முதல் 10 ஓவர்கள் வரை பொறுமை காத்த இந்த ஜோடி, அதன்பின் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளையும், சிக்சர்களை பறக்கவிட்டனர்.
அதிலும் டூ பிளெசிஸ் ஒருபக்கம் நிதானம் காட்ட, ஃபெரீரா அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். பின்னர் 39 ரன்கள் எடுத்த நிலையில் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஃபெரீரா அரைசதம் கடந்து அசத்தினார். பின் அவருடன் இணைந்த ரொமாரியோ செஃபெர்டும் தனது பங்கிற்கு 4 சிக்சர்களை பறக்கவிட்டு 20 பந்துகளில் 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 190 ரன்காளைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டொனாவன் ஃபெரீரா 40 பந்துகளில் 5 சிக்சர், 8 பவுண்டரிகள் என 82 ரன்களைச் சேர்த்தார். சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் சுப்புராயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now