Advertisement

இந்த ஆண்டு இந்திய அணிக்கு ஸ்பெஷலான ஆண்டு - கேஎல் ராகுல் மகிழ்ச்சி!

சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். சிறந்த டிரஸ்சிங் அறையும், சிறந்த சூழ்நிலையும், சிறந்த செயல் திறனுக்கு பங்களித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது என கேஎல் ராகுல் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 31, 2021 • 12:53 PM
SA v IND 1st Test: KL Rahul Says Team India Is Lucky To Have Such A 'Quality' Bowling Line Up
SA v IND 1st Test: KL Rahul Says Team India Is Lucky To Have Such A 'Quality' Bowling Line Up (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.

அந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Trending


வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. வெளிநாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இந்த ஆண்டு அசத்தல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 5ஆவது டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 328 ரன் இலக்கை அடைந்து சரித்திரம் படைத்தது.

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டும் சிறப்பாக அமைந்தது என்று லோகேஷ் ராகுல் தெரிவித்தார். 
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணிக்கு இதுஒரு சூப்பர் ஸ்பெ‌ஷல் ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு நாம் பெற்றுள்ள சாதனைகள் உண்மையிலேயே சிறப்பானவை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது மிகச்சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு நிறைய கடின உழைப்பு மற்றும் ஒழுக்கம் தேவைப்பட்டது. சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். சிறந்த டிரஸ்சிங் அறையும், சிறந்த சூழ்நிலையும், சிறந்த செயல் திறனுக்கு பங்களித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்த நேரத்தில் டிரஸ்சிங் அறை சூழல் ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு சிறந்த டெஸ்ட் வெற்றி தொடரின் முதல் ஆட்டத்தில் அணியின் முழு செயல்திறனை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வெற்றியை ஒருநாள் கொண்டாடிவிட்டு மீண்டும் பயிற்சிக்கு திரும்புவோம். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கவனம் செலுத்த தொடங்குவோம்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement