
SA v IND: Bumrah Records 100 Test Wickets Away From Home (Image Source: Google)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் தான், இந்திய அணியால் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது. அதுவும் தென் ஆப்பிரிக்க அணியின் கோட்டையான செஞ்சூரியனில் அந்த அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்தது இந்திய அணி.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஷமி அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா 2 இன்னிங்ஸ்களிலும் தலா 2 விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.