Advertisement

ஜேஹன்னஸ்பர்க்கில் சாதனைக்காக காத்திருக்கும் கோலி!

ஜேஹன்னஸ்பர்க்கில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைக்க இருக்கிறார்.

Advertisement
SA v IND: Virat Kohli eyes batting milestone in Johannesburg
SA v IND: Virat Kohli eyes batting milestone in Johannesburg (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 02, 2022 • 07:41 PM

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் உள்ளார். இருந்தாலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 02, 2022 • 07:41 PM

தற்போது தென்ஆப்பிரிக்காவில் இந்திய டெஸ்ட் அணி சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பந்து வீச்சாளர்கள் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவினர்.

Trending

விராட் கோலி, புஜாரா, ரஹானே போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். விராட் கோலி சிறப்பான வகையில் ரன் கணக்கை தொடங்கினார். ஆனால் வழக்கும்போல் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் 2ஆவது டெஸ்ட் நாளை ஜேஹன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. விராட் கோலிக்கு இந்த மைதானம் மிகவும் ராசியானது. இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்துள்ளார். இதனால் சதத்திற்கான வறட்சியை இந்த போட்டியுடன் முடிவுக்கு  கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

மேலும், இந்த மைதானத்தில் விராட் கோலி 310 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து வீரர் ஜான் ரெய்டு 316 ரன்கள் சேர்த்துள்ளார். விராட் கோலி இன்னும் 7 ரன்கள் அடித்தால், ஜேஹன்னஸ்பர்க்கில் அதிக ரன்கள் விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெறுவார். நாளைய போட்டியில் அவர் இச்சாதனையைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement