
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் டிராவிஸ் ஹெட் 6 ரன்களுக்கும், மேத்யூ ஷார்ட் 20 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் ஒரு ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிம் டேவிட் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்த நிலையில், டிம் டேவிட் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.