
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை 3-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது. இதையடுத்து நடைபெற்றுவரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஜஹன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவிச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டி காக்கும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து ரஸ்ஸி வேண்டர் டுசென் 30 ரன்களுக்கும், ஹென்றிச் கிளாசென் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - டேவிட் மில்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.