
SA vs ENG: James Anderson Becomes The First Cricketer To Play 100 Tests At Home (Image Source: Google)
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் 2003ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிவரும் ஆண்டர்சன், 19 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக அளப்பரிய பங்காற்றியிருக்கிறார்.
174 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 658 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆண்டர்சனுக்கு 40 வயதாகிவிட்டபோதிலும், இப்போதும் இங்கிலாந்துக்காக விளையாடி வருகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஒரு வேகப்பந்துவீச்சாளராக இவ்வளவு நீண்ட கெரியர் அளப்பரிய சாதனை ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் பட்டியலில் முத்தையா முரளிதரன் (800) மற்றும் ஷேன் வார்ன் (708) ஆகிய 2 லெஜண்ட் ஸ்பின்னர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் ஆண்டர்சன்.