
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் டி20 தொடர் தொடங்கியுள்ளது. டர்பன் மைதானத்தில் நேற்று நடக்கவிருந்த முதல் டி20 போட்டி டாஸ் கூட போடப்படாமல் கனமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருந்தன.
இதனால் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் பலரும் நீண்ட நேரம் மழை நிற்கும் என்று காத்திருந்தனர். ஆனால் கடைசி வரை மழை தொடர்ந்ததால், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியே மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளும் பாதிக்கப்படுமோ என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதனிடையே தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். நேற்றைய போட்டியின் போது சுனில் கவாஸ்கர் பேசுகையில், “தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மைதானம் மழை பெய்த போது வெறும் பிட்ச் மற்றும் 30 யார்ட் வளையம் மட்டுமே தார்பாய் மூலமாக மூடப்பட்டிருந்தது. இப்படியிருந்தால், ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைதான் வரும்.