விராட் கோலி, ராகுல் டிராவிட் சாதனையை உடைத்த திலக் வர்மா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்தலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2ஆவது போட்டியில் வென்ற தென் ஆப்பிரிக்கா தொடரை சமன் செய்ததால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3ஆவது போட்டி இன்று பார்ல் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் போராடி 296/8 ரன்கள் சேர்த்து அசத்தியது. இந்திய அணிக்கு அறிமுக வீரராக களமிறங்கிய ரஜத் படிதார் 22, சாய் சுதர்சன் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த கேப்டன் கேஎல் ராகுலும் 21 ரன்களில் நடையை கட்டினார்.
Trending
இந்த சூழ்நிலையில் மறுபுறம் களமிறங்கி இருந்த சஞ்சு சாம்சன் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அடுத்ததாக வந்த இளம் திலக் வர்மாவும் நிதான ஆட்டத்டதை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் திலக் வர்மா 5 பவுண்டரி 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் முதல் முறையாக சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து 108 ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் ரிங்கு சிங் 38 வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஹென்றிக்ஸ் 3 விக்கெட்களை சாய்த்தார்.
முன்னதாக இந்த போட்டியில் திலக் வர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் சவாலான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி படைத்திருந்த இந்த சாதனையை முதல் போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன் உடைத்திருந்தார். தற்போது 3ஆவது போட்டியில் அந்த சாதனையை உடைத்துள்ள திலக் வருமா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரராக என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.
- திலக் வர்மா : 21 வருடம் 43 நாட்கள்*
- சாய் சுதர்சன் : 22 வருடம் 63 நாட்கள்
- விராட் கோலி : 22 வருடம் 68 நாட்கள்
- ராகுல் டிராவிட் : 24 வருடம் 22 நாட்கள்
Win Big, Make Your Cricket Tales Now