
South Africa vs India 3rd T20I Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகாளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து, இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை (நவம்பர் 13) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிப்பதன் காரணமாக, இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் வாய்ப்பை பெறுவதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பையும் பெறும். மேற்கொண்டு இரு அணியில் உள்ள பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஃபார்ம்மில் இருப்பதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SA vs IND 3rd T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
- இடம் - சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானம், செஞ்சூரியன்
- நேரம் - நவம்பர் 13, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)