Advertisement

தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது.

Advertisement
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 02, 2024 • 10:10 PM

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விலையாடி வருகிறது. இதில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 02, 2024 • 10:10 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கேப்டனிலுள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெல்லும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும். அதேசமயம் மறுபக்கம் தோல்வியைத் தவிர்க்க இந்திய அணி கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
  • இடம் - நியூலேண்ட்ஸ், கேப்டவுன்
  • நேரம் - மதியம் 2 மணி (இந்திய நேரப்படி) 

நேரலை

இப்போட்டியை தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி,  ஆங்கிலம் போன்ற  மொழிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் கிரிக்கெட் பிரியர்கள் மொபைல் போன்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பைப் பார்க்கலாம்.

பிட்ச் ரிப்போர்ட்

சென்சூரியன் மைதானத்தைப் போலவே நியூலேண்ட்ஸ் மைதானமும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் ராஜாங்கம் நடத்தும் இடமாக இருந்து வருகிறது. மேலும் மலைப்பகுதிகளுக்கு முன்பாக மைதானம் இருப்பதால் காற்றின் வேகம் சற்று அதிகமாக இருக்கலாம். அதனால் ஸ்விங் செய்யக்கூடிய பவுலர்கள் இந்த மைதானத்தில் அதிக சாதகத்தை பெறுவார்கள்.

எனவே பேட்ஸ்மேன்கள் இங்கே ரன்கள் குவிப்பதற்கு மிகவும் கவனத்துடன் செட்டிலாகி விளையாடுவது அவசியமாகும். அத்துடன் கடைசி 2 நாட்களில் இந்த மைதானம் ஓரளவு ஸ்பின்னர்களுக்கு நன்றாகவே கை கொடுக்கும் என்று நம்பலாம். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம். 

உத்தேச லெவன்

தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கே), ஐடன் மார்க்ராம், டோனி டி ஸோர்ஸி, ஜுபைர் ஹம்சா, கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, நந்த்ரே பர்கர்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்தூல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: கேஎல் ராகுல்
  • பேட்டர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், டீன் எல்கர், ஐடன் மார்க்ரம்
  • ஆல்ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), மார்கோ ஜான்சென்
  • பந்துவீச்சாளர்கள்: ஜஸ்பிரிட் பும்ரா, ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement