Advertisement

தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 11, 2023 • 10:17 PM

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி டர்பனில் நாளை நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 11, 2023 • 10:17 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான் இரண்டாவது டி20 போட்டி நாளை க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணியும் சமபலத்துடன் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
  • இடம் - செயின்ட் ஜார்ஜ் பார்க், க்கெபர்ஹா
  • நேரம் - இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அனுபவம் மற்றும் இளம் வீரர்களைக் கொண்ட கலவையாக உள்ளது. சூரியகுமார் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் தங்கள் அனுபவத்தை அணிக்கு கொண்டு வரும் போது, ​​யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த கலவையானது ஐடன் மார்க்ரம் தலைமையிலான அணிக்கு எதிரான கடுமையான மோதலுக்கு களம் அமைக்கிறது.

இந்திய அணி இடது-வலதுகை பேட்ஸ்மேன்கள் கலவையுடன், தொடக்க ஜோடியான யஷஸ்வி மற்றும் ஷுப்மான் கில் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் இன்னிங்ஸுக்கு ஒரு ஆற்றல்மிக்க மற்றும் அதிரடியான தொடக்கத்தை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களைத் தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடியின் மூலம் அப்பர்-மிடில் ஆர்டர் வலுப்பெறும். அவர்களின் ஸ்திரத்தன்மை மற்றும் ஆக்ரோஷமான ஸ்ட்ரோக் ஆட்டம் அணிக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் முக்கியமாக இருக்கும்.

லோயர் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் மற்றும் ரிங்குவின் அதிரடியான பேட்டிங் இன்னிங்சில் இந்தியாவுக்கு தேவையான ஃபினீஷிங்கை வழங்குவார்கள். ஜடேஜா தனது ஆல்ரவுண்ட் திறமையால், பந்துவீச்சு துறையில் முக்கிய வீரராக இருப்பார். அவரைத்தவிர்த்து முகமது சிராஜ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகிய்யோரும் அணியில் இடம்பிடித்துள்ளது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசயம் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பேட்டிங், பவுலிங் என இருபிரிவிலும் இந்திய அணிக்கு சவால் கொடுப்பார்கள் என சந்தேகமில்லை. அந்த அணியின் பேட்டிங்கில் ரீசா ஹென்றிக்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், ஹென்றிச் கிளாசென், மேத்யூ பிரிஸ்ட்கீ ஆகியோருடன் ஆல் ரவுண்டர்கள் மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

பந்துவீச்சு துறையில் தப்ரைஸ் ஷம்ஸி, கேசவ் மகாராஜ் போன்று தரமான சுழற்பந்துவீச்சாளர்களுடன், பெஹ்லுக்வாயோ, லிசாத் வில்லியம்ஸ், பார்ட்மேன் ஆகியோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.  இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பிட்ச் ரிப்போர்ட்

செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தில் ஆரம்பத்திலேயே புதிய பிட்ச் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதற்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. எனவே பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்ப்பது அவசியமாகும். ஏனெனில் போட்டி நடைபெற நடைபெற இங்கு ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.

அதே போல வேகப்பந்து வீச்சாளர்களும் சமமான ஆதிக்கத்தை செலுத்தவர்கள் என்று நம்பலாம். எனவே சமமான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் அதனால் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து ஓரளவு பெரிய ஸ்கோர் எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -25
  • இந்தியா - 13
  • தென் ஆப்பிரிக்கா - 10
  • முடிவில்லை - 02

உத்தேச லெவன்

தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கே), டோனோவன் ஃபெரீரா, டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், லிசாட் வில்லியம்ஸ்

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கே), இஷான் கிஷன், ரின்கு சிங், ரவீந்திர ஜடேஜல், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷான்
  • பேட்ஸ்மேன்கள்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்-ரவுண்டர்: ரசீந்திர ஜடேஜா, ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: ஜெரால்ட் கோட்ஸி, ரவி பிஷ்னோய்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement