Advertisement

தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.

Advertisement
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 13, 2023 • 11:19 PM

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 13, 2023 • 11:19 PM

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் நாளை நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றால் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
  • இடம் - நியூ வாண்டரர்ஸ் மைதானம், ஜோஹன்னஸ்பர்க்
  • நேரம் - இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

இப்போட்டியை தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி,  ஆங்கிலம் போன்ற  மொழிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் கிரிக்கெட் பிரியர்கள் மொபைல் போன்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பைப் பார்க்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 26
  • இந்தியா - 13
  • தென் ஆப்பிரிக்கா - 11
  • முடிவில்லை - 02

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ஜோஹ்ன்னஸ்பர்க் ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக இருக்கும். இதனால் இங்கு பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து இமாலய இலக்கை நிர்ணயிப்பது வெற்றிக்கு உதவும்.

உத்தேச லெவன்

தென் ஆப்பிரிக்கா: மேத்யூ ப்ரீட்ஸ்கீ, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கே), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சென், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, ஜெரால்ட் கோட்ஸி, லிசாட் வில்லியம்ஸ்.

இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கே), இஷான் கிஷன் , ரின்கு சிங், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷான்
  • பேட்ஸ்மேன்கள்: சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் (துணை கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர்
  • ஆல்-ரவுண்டர்: ரசீந்திர ஜடேஜா, ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள்: ஜெரால்ட் கோட்ஸி, ரவி பிஷ்னோய்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement