
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொனணட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறுகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
- இடம் - சூப்பர் ஸ்போர்ட் மைதானம், செஞ்சூரியன்
- நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)