
தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது முதல் கட்டமாக அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்க காத்திருக்கிறது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும் களம் காண்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.