
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, ஒருநாள் போட்டி தொடரில் அதற்கு பழிவாங்கும் முனைப்புடன் உள்ளது.
இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் தான் குழப்பம் நீடித்து வருகிறது. பேட்டிங் வரிசையில் 4ஆவது இடத்திற்கு சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் இடையேயான போட்டி மற்றும் பவுலிங் தேர்வுகளில் தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் என ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கம்பேக் கொடுக்கவுள்ளதாக துணைக்கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார். 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது காலில் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறிய முகமது சிராஜ் 3ஆவது டெஸ்டில் இருந்து விலகினார். இதனால் ஒருநாள் போட்டியில் அவர் பங்கு பெறுவாரா என்ற குழப்பம் நீடித்தது. ஆனால் பும்ராவின் பதில் தற்போது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.