தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளூக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்,
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (நவம்பர் 15) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும். அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை சமன்செய்யும்.
Trending
இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இரு அணியில் உள்ள பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஃபார்ம்மில் இருப்பதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியாமல் தாடுமாறியது. இருப்பினும் அதன்பின் மூன்றாவது போட்டியில் அசதத்தலான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் அணியில் தேவைக்கேற்ப பேட்டர்கள் இருப்பதால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பாதைக்கும் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளதால், இந்திய அணி இப்போட்டியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உத்தேச லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(கே), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், ராமன்தீப் சிங், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி
தென் ஆப்பிரிக்க அணி
ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதால் போட்டியில் தோல்வியைத் தழுவினாலுன், இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் கடந்த போட்டியில் கூட இறுதிவரை போராடிய பிறகே அந்த அணி தோல்வியைத் தழுவியது. இதனால் இந்த ஆட்டத்தில் அந்த அணி கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த அணியின் நட்சத்திர பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவருது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் சிமெலேன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ், லூத்தோ சிபம்லா
Win Big, Make Your Cricket Tales Now