
SA vs IND: Rahul Dravid condition to the Indian Batsman (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. அதற்கான வாய்ப்பு இம்முறை கிடைத்துள்ளது. டி வில்லியர்ஸ், அம்லா, டு பிளஸிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத தென் ஆப்பிரிக்காவை முதல் டெஸ்டில் இந்தியா வீழ்த்தியது.
ஆனால் தோல்வியே சந்திக்காத ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டனர். இது பயிற்சியாளர் டிராவிட்டை வெறுப்படைய செய்துள்ளது.
இதனால், கேப்டவுன் டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். ஆனால் கேப்டவுன் ஆடுகளம் இந்தியாவுக்கு மோசமாகவே அமைந்துள்ளது. இதுவரை இந்தியா உள்பட எந்த ஆசிய அணியும் கேப்டவுனில் வென்றது இல்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது முக்கியமாகும்.