SA vs IND: கேப்டவுனில் பயிற்சியை ஆரம்பித்த இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய அணி வீரர்கள் இன்று தங்களது பயிற்சியை ஆரம்பித்தனர்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இந்திய அணி இதுநாள் வரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதில்லை என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
— BCCI (@BCCI) January 9, 2022
இதையடுத்து இப்போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் கேப்டவுனில் இன்று தங்களது பயிற்சியை மேற்கொண்டனர். இதனை பிசிசிஐ தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் கடந்த போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காமல் இருந்த விராட் கோலியும் இன்றைய பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனால் கேப்டவுன் டெஸ்டில் அவர் இடம்பெறுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now